Dakota Johnson: நந்தியின் காதில் ஆசையை சொன்ன அமெரிக்க நடிகை; பயபக்தியுடன் சிவனை கோவிலில் வழிபாடு.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் இசைக்கச்சேரி விழாவுக்கு வந்துள்ள அமெரிக்க நடிகை & பாடகர், சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
ஜனவரி 18, மும்பை (Cinema News): பிரபல அமெரிக்க நடிகையான டகோடா மயி ஜான்சன் (Dakota Mayi Johnson), தனது காதலர் மற்றும் பாடகரான கிரிஸ் மார்டின் (Chris Martin) உடன், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். கிரிஸ் மார்ட்டின் இசைக்கச்சேரி (Coldplay Music Event) மும்பையில் நடைபெறவுள்ள நிலையில், இருவரும் அதனை முன்னிட்டு மும்பை வந்தடைந்துள்ளார். நிகழ்ச்சிக்கு முன்னதாக மும்பையை சுற்றிப்பார்த்து வரும் இசைக்குழுவினர், மும்பையில் உள்ள ஸ்ரீ பாபுல்நாத் சிவன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது, நடிகை டகோடா, இந்துக்களின் நம்பிக்கைப்படி சிவனின் வாகனமான நந்தியின் காதுகளில் தனது ஆசையை கூறினார். Jayam Ravi & Aarti Divorce: நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு; கெஞ்சும் ஆர்த்தி, விடாப்பிடியாக ரவி.. நீதிமன்றம் கொடுத்த அப்டேட்.!