TN Weather Update: காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

நெல்லை, குமரி, கோவை உட்பட 4 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Rain in Tamilnadu (Photo Credit: @ANI X)

ஜூன் 22 , சென்னை (Chennai): தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, நாளைய வானிலையில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலான மாவட்டங்களில் மழைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சென்னை வானிலை (Chennai RMC) ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. அதேவேளையில், மழை இல்லாத மாவட்டங்கள் வெப்பநிலை என்பது இயல்பை விட 1 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகம் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் 22ம் தேதியில், அடுத்த 3 மணிநேரத்திற்கு காலை 10 மணிவரையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Dog Terror In Sambhajinagar: சிறுமியை துரத்தி துரத்தி கடிக்க வந்த தெரு நாய்.. வைரலாகும் வீடியோ..! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)