Road Accident: இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி உள்ளே..!
கேரளாவில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 34 பயணிகள் காயமடைந்தனர்.
டிசம்பர் 03, கண்ணூர் (Kerala News): கேரள மாநிலம், கண்ணூர் (Kannur) கல்லேரிரம்மலா அருகே நேற்று (டிசம்பர் 02) மதியம் 3 மணியளவில், இரண்டு கேரள அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி (Bus Accident) விபத்துக்குள்ளானது. இதில், 34 பயணிகள் காயமடைந்தனர். உடனே அருகில் இருந்த உள்ளூர் வாசிகள் சிலர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை. Road Accident: அரசுப் பேருந்து மீது கார் மோதி கோர விபத்து; மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலியான சோகம்..!
இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கனமழை மற்றும் மோசமான சுற்றுச்சூழல் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், இந்த விபத்துக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ இதோ: