Medical College Students Dies in Accident (Photo Credit: @thetatvaindia X)

டிசம்பர் 03, ஆலப்புழா (Kerala News): கேரள மாநிலம், ஆலப்புழா (Alappuzha) மாவட்டத்தில் உள்ள வந்தனம் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவக் கல்வி பயின்று வந்த 11 மாணவர்கள் காரில் பயணம் செய்துள்ளனர். மறுபுறம், குருவாயூரிலிருந்து காயாங்குளம் நோக்கி அரசுப் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில், கார் கட்டுப்பாட்டை இழந்து அரசுப் பேருந்து (Car - Bus Accident) மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் நேற்று (டிசம்பர் 02) இரவு 9 மணியளவில் நடந்துள்ளது. IPS Officer Dies: ஜீப் டயர் வெடித்து விபத்து.. 26 வயது ஐபிஎஸ் அதிகாரி பலி..!

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். அதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், காரில் அளவிற்கதிகமாக 11 பேர் சென்றதாகவும், அத்துடன் பெருமழை பெய்ததாலும் விபத்து நேர்ந்திருக்கலாம் என தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.