Cold Wave: வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் குளிர்; பனித்துளிகள் உறைந்து அசத்தல் காணொளி.!
அதிக குளிர் காரணமாக புற்களில் இருந்த பனித்துளிகள் அனைத்தும் உறைந்து நிற்கும் நிகழ்வு ஒடிசாவில் நடந்துள்ளது.
டிசம்பர் 22, மயூர்பஞ்ச் (Odisha News): தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி, வடக்கு-வடகிழக்கு மாநிலங்கள் வாயிலாக நிறைவுபெற்று, தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையாக இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதனிடையே, பருவமழை தொடங்கி நிறைவுபெற்ற வடமாநிலங்களில், தற்போது குளிர்காலம் தொடங்கி இருக்கிறது. இதனால் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. ஜம்மு காஷ்மீர், உத்திரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், ஒடிசா, பீகார் உட்பட பல மாநிலங்களில் கடும் குளிர் காரணமாக மக்கள் அவதிப்படுகின்றனர். சில இடங்களில் உறைபனி சூழலும் நிலவுகிறது. இதனிடையே, ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பன்ச் பகுதியில், இன்று உறைபனி சூழல் நிலவியது. இதனால் புற்களில் இருந்த நீர்த்துளிகள் உறைந்துபோனது. அம்மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. PM Modi Kuwait Visit: "43 ஆண்டுகளுக்கு பின் குவைத் மண்ணில் இந்திய பிரதமர்" - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.!
உறைபனி காரணமாக புற்களில் நீர் உறைந்து காணப்படும் காட்சிகள்:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)