Biryani Delivery: வெஜ் பிரியாணி கேட்ட சைவ பிரியருக்கு அதிர்ச்சி.. கண்ணீருடன் வெதும்பிய பெண்.!

சைவ பிரியரான பெண் ஒருவர் பிரியாணி ஆர்டர் செய்தபோது, அவருக்கு சிக்கன் பிரியாணி விநியோகம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Biryani Wrongly Delivered in Noida (Photo Credit: @sharmas10152 X)

ஏப்ரல் 07, நொய்டா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் வசித்து வரும் இளம்பெண் சாயா சர்மா. இவர் சைவ உணவு மட்டும் சாப்பிடும் நபர் ஆவார். நேற்று இரவு நேரத்தில் சாப்பிட வெஜிடபிள் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். உணவும் டெலிவரி செய்யப்பட்ட பின்னர் அவர் பசியால் இரண்டு வாய் எடுத்து சாப்பிட்ட நிலையில், அதில் சிக்கன் இருந்துள்ளது. இதனால் சைவ பிரியாணி ஆர்டர் செய்த தனக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதாக பெண் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. உணவகத்தின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. Madras Eye: வேகமெடுக்குது மெட்ராஸ் ஐ.. சென்னைவாசிகளே உஷார்.! 

பெண் தனது ஆதங்கத்தை தெரிவிக்கும் காணொளி:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement