ஏப்ரல் 07, சென்னை (Health Tips Tamil): ஒவ்வொரு ஆண்டின் கோடைகாலத்தில் பல்வேறு காரணங்களால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மெட்ராஸ் ஐ எனப்படும் கன்சார்ந்த கோளாறு ஏற்படும். நடப்பு ஆண்டிலும் மெட்ராஸ் ஐ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனைக்கு தினம் வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. கண்களில் எரிச்சல், வெளிப்புறம் சிவந்து காணப்படுதல், கண்களில் இருந்து நீர் வெளியேறிக்கொண்டு இருத்தல், இமைகள் ஒட்டிக்கொள்ளுதல் போன்றவை மெட்ராஸ் ஐ பாதிப்புக்கான அறிகுறிகள் ஆகும். இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மருத்துவரை சந்திப்பது நல்லது. காலநிலை மாற்றத்தினால் பரவும் மெட்ராஸ் ஐ அடினோ வைரஸ் பாதிப்பு காரணமாக உருவாகிறது. இது தும்மல், இருமல் போல பிறருக்கும் பரவும். Coconut Water: இளநீர் குடித்த 69 வயது முதியவர் மூளை வீங்கி மரணம்.. அதிர்ச்சிதரும் காரணம்.!
தொட்டால் பரவும் உஷார்:
நோய்ப்பாதிப்பு ஏற்பட்டுள்ளவரின் கண்களை பார்த்தால் இந்நோய் பரவாது எனினும், அவரை தொடுதல் என்ற விஷயத்தின் மூலமாக விரைந்து பாதிக்கும். இந்நோய் தொண்டை, கண் ஆகிய உறுப்புகளை குறிவைக்கும். நோய் பாதிப்பு ஏற்பட்ட 10 முதல் 14 நாட்களுக்குள் உரிய சிகிச்சைக்கு பின் சரியாகும். நோய் பாதிப்பை தடுக்க கைகளை அவ்வப்போது கழுவுதல், முகக்கவசம் அணிதல், சத்துள்ள உணவுகளை சாப்பிடுதல் அவசியம். அதேநேரத்தில், கண் பாதிப்பை எதிர்கொண்டோர் சுயமாக மருந்துகளையும் எடுக்கக்கூடாது. இது பாதிப்பை அதிகரிக்க வழிவகை செய்யும் என்பதால், மருத்துவமனைக்கு செல்வது நல்லது. நெரிசல் அதிகம் இருக்கும் இடங்களில் செல்லாமல் இருக்கலாம்.