Surgery During Earthquake: மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது திடீர் நிலநடுக்கம்.. பதற்றத்திலும் கடமையில் கண்ணாக பணி.!

வடமாநிலங்களை அதிரவைத்த நிலநடுக்கத்தின் அதிர்வு ஜம்முவிலும் நீடித்த நிலையில், மருத்துவர்கள் நிலநடுக்கத்தின்போதும் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

Visual from Viral Video (Photo Credit: Twitter)

மார்ச் 22, அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir) மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் (Anantnag) மாவட்டத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் (Afghanistan Pakistan Earthquake) நாடுகளில் உணரப்பட்ட நிலநடுக்கம், இந்தியாவின் பல வடமாநிலத்திலும் ஏற்பட்டது. டெல்லியிலும் (Delhi) நிலநடுக்கத்தின் அதிர்வலையால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பீஜ்பெஹ்ரா மருத்துவமனையில் (Bijbehara Earthquake) மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துகொண்டு இருந்தபோது திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு மின்விளக்குகள் மின்தடைபட்டு பின் ஒளிர்ந்தன. இப்படியான பரபரப்பு சூழலிலும் நோயாளியின் நிலைமையை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டனர். இதுகுறித்த வீடியோ வைரலாகியுள்ளது. Pakistan Earthquake: பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டதால் அதிர்ச்சி., கட்டிடங்கள் இடிந்து விழுந்து 9 பேர் மரணம்., 100 பேர் படுகாயம்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)