Mumbai Anti Extortion Cell: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் கைது; ரூ.8 கோடி மதிப்புள்ள கேட்டமைன் பறிமுதல்.!
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, 15 கிலோ அளவிலான போதைப்பொருளை கடத்தி விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மார்ச் 16, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை (Mumbai) போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு (Anit Extortion Cell), அந்தேரி (Andheri) பகுதியில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்தோர் இருப்பதாகவும், அவர்கள் போதைப்பொருளை (Drug Smuggling Gang) விற்பனைக்கு வைத்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய சோதனையில் 15.743 கிலோ அளவுள்ள கேட்டமைன் (Ketamine Drug) கைப்பற்றப்பட்டது. இதன் கள்ளச்சந்தை மதிப்பு ரூ.8 கோடி ஆகும். கைது செய்யப்பட்ட இருவரும் சர்வதேச போதைப்பொருள் கும்பலோடு தொடர்பில் இருப்பவர்கள் என்பதும் அம்பலமாகியுள்ளதால், விசாரணை நடந்து வருகிறது. Salem Minor Girl Rape: 15 வயது சிறுமியை 5 மாத கர்ப்பிணியாக்கிய 15 வயது சிறுவன்.. படிப்பதாக கூறி வீட்டிலேயே உல்லாசம்.. பதறிப்போன பெற்றோர்.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)