PM Narendra Modi: "ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுக அரசு வீழ்த்தப்படும்".. அதிமுக + பாஜக கூட்டணி இணைவு குறித்து பிரதமர் பெருமிதம்.!
எம்.ஜி.ஆர் & ஜெயலலிதா தந்த தொலைநோக்கு பார்வையுடன் கொண்ட ஆட்சியை தமிழ்நாட்டுக்கு வழங்க தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்தது மகிழ்ச்சியை தருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்விட் பதிவு செய்துள்ளார்.
ஏப்ரல் 12, புதுடெல்லி (New Delhi): 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அதிகாரபூர்வமாக இணைந்துள்ளது. தமிழ்நாட்டில் மாநில அளவில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக பங்கெடுத்துள்ளது. இந்த விஷயம் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, "வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்! தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, நாம் தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்வோம்; மாநிலத்திற்கு அயராது பாடுபடுவோம். மாமனிதர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் ஓர் அரசை நாம் உறுதிசெய்வோம். தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. அதனை நமது கூட்டணி செய்து முடிக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. AIADMK BJP Alliance: தாமரையுடன் இணைந்த இலை.. கூட்டணி சாத்தியமானது ஏன்? தமிழக அரசியலில் மெகா திருப்பம்.!
பிரதமர் நரேந்திர மோடி அதிமுக கூட்டணி குறித்து தமிழில் ட்விட்:
நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி வலைப்பதிவு:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)