Vaikuntha Ekadasi: மோகினி அலங்காரத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள்; கோவிந்தா கோஷத்துடன் இறைவனை தரிசித்த பக்தர்கள்.!

திருவரங்கம் கோவிலில் இறைவன் நம்பெருமாள், மோகினி அலங்காரத்தில் தோற்றம் அளித்து பக்தர்களுக்கு காட்சிதந்தார்.

Vaikuntha Ekadasi Festival Lord Namperumal (Photo Credit: @ANI X)

ஜனவரி 09, திருவரங்கம் (Trichy News): மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி, வருடத்தில் ஏற்படும் 25 ஏகாதசிகளில் முக்கியமானதாக கவனிக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி (Vaikuntha Ekadashi) விரதம் ஆன்மீக பக்தர்களிடையே மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களில் ஒன்றாகவும் கவனிக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த பண்டிகையான வைகுண்ட ஏகாதசி, பெருமாள் கோவில்களில் திரளாக சிறப்பிக்கப்படுகிறது. 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் (Sri Ranganathaswamy Temple) சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நம்பெருமாள் 10ம் நாள் பகல்பத்து மோகினி (Mohini Alankaram) அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதன் சிறப்பு காணொளி காட்சிகள் உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது. Raa Pathu 2025: வைகுண்ட ஏகாதசி 2025; ராப்பத்து உற்சவ திருவிழா கொண்டாட்டம்.. தேதி, நேரம் குறித்த முழு விவரம் உள்ளே..!

பக்தர்களுக்கு காட்சிதந்த பெருமாள்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now