மகளின் மாமனாருடன் 4 வது முறை ஓட்டம் பிடித்த பெண்மணி.. கணவர் குமுறல்..!

தனது மகளின் மாமனாருடன் உறவை ஏற்படுத்திக்கொண்ட 43 வயது பெண்மணி, அவருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

Mamta & Shailendra alias Billu (Photo Credit: @IndiaToday X)

ஏப்ரல் 19, படாவுன் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாடவுன் மாவட்டம், தடகன்ச் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி மம்தா (வயது 43). தம்பதிகளுக்கு கடந்த 2002ல் திருமணம் முடிந்து 2 மகன், 2 மகள்கள் என 4 குழந்தைகள் இருக்கின்றனர். மூத்த மகளுக்கு கடந்த 2023ம் ஆண்டு உள்ளூரைச் சேர்ந்த நபருடன் திருமணம் முடிந்தது. இளைஞரின் தந்தை சைலேந்திரா பில்லு. இவர் அவ்வப்போது மம்தாவின் வீட்டுக்கு வந்து செல்வார் என கூறப்படுகிறது. மம்தாவின் கணவர் லாரி ஓட்டுநர் என்பதால் மாதம் 2 முறை மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வார் என கூறப்படுகிறது. இதனிடையே, மம்தா - சைலேந்திரா இடையே கள்ளக்காதல் பழக்கம் உண்டாகி இருவரும் பல முறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். Read More: முன்விரோதத்தில் கொடுமை.. 16 வயது மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்.. அதிர்ச்சி காட்சிகள் லீக்.!  இதுவரை 3 முறை சைலேந்திராவுடன் ஓட்டம் பிடித்த பெண்ணை கணவர் பேச்சுவார்த்தை நடத்தி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 11, 2025 அன்று வீட்டில் இருந்த நகை, பணத்துடன் மம்தா - சைலேந்திரா ஓட்டம் பிடித்தனர். நேற்று (ஏப்ரல் 18) வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த லாரி ஓட்டுநர் மனைவி மாயமானதை கண்டுள்ளார். மேலும், நகைகளும் காணவில்லை. சைலேந்திராவும் மாயமானது உறுதி செய்யப்பட்டதால், மனைவி ஓட்டம் பிடித்ததை அவர் உறுதி செய்துள்ளார். இதனால் விரக்தியடைந்த கணவர் மனைவியை கண்டறிந்து தரக்கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகளின் மாமனாருடன் பெண் ஓட்டம் பிடித்தது குறித்து காவல்துறை விசாரணை:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement