ஏப்ரல் 19, போபால் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் மாவட்டம், கெளதம் நகர் காவல் எல்லைக்குட்பட்ட சேட்டக் பாலம் பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவர் 8 பேர் கும்பலால் தாக்கப்பட்டார். ஷாரதா நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், 8 பேர் கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இந்த விஷயம் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி நடைபெற்ற நிலையில், இதன் வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியாகி உள்ளூரில் வைரலாகியது. JEE Mains Result Link: ஜெஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு.. லிங்க் உள்ளே.!
சிறுவன் மீது தாக்குதல்:
வீடியோ குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 8 பேர் கும்பலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில், 16 வயது சிறுவன் அர்பான்ஸ் ஷேக், ஷானு கஃடா உட்பட 8 பேர் கும்பலால் முன்விரோதம் காரணமான பிரச்சனையில் தாக்கப்பட்டது தெரியவந்தது. தற்போது 8 பேர் கும்பலுக்கும் அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.
நிர்வாணப்படுத்தி தாக்கிய காட்சிகள்:
भोपाल में इंसानियत को शर्मसार कर देने वाली घटना सामने आयी हैं
नाबालिग युवक की निर्वस्त्र कर की पिटाई ओर वायरल कर दिया नाबालिग का वीडियो#bhopal #emtnews #news #instagram #india #viral #trending #breakingnews
content Warning: Violence#सुप्रीम_कोठा_बंद_करो pic.twitter.com/fL9IpWHsTU
— EMT NEWS - SACHIN MISHRA (@p981gy3JG2hiccj) April 18, 2025