வானிலை: அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை.. 17 மாவட்டங்களின் லிஸ்ட் இதோ.!
மாலை 4 மணிவரை 17 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வானிலை தகவலை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழை பின் தொடரவும்.
மே 30, நுங்கம்பாக்கம் (Chennai News): வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியதன் காரணமாக, தமிழகத்தில் இன்று மாலை 4 மணி வரை 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, மதுரை, கரூர், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாவும், தூத்துக்குடி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. Gold Silver Price: குறைந்த வேகத்தில் 72,000ஐ நோக்கி.. படிப்படியாக உயரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?.!