MS Dhoni: ஐபிஎல் 2025; பயிற்சி நடுவே செல்போன் பார்க்கும் எம்எஸ் தோனி.. வைரல் வீடியோ இதோ..!
2025 ஐபிஎல் தொடருக்காக எம்எஸ் தோனி பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இதனிடையே செல்போன் பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஜனவரி 24, டெல்லி (Sports News): இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டிகள், மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதியில் (IPL 2025 Schedule) நிறைவுபெறும். இதில், பங்கேற்கும் 10 அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் நடப்பு கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் இருக்கிறார். சிஎஸ்கே அணி கடந்த 2010, 2011, 2018, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் வெற்றிக்கோப்பையையும் தட்டிச்சென்றுள்ளது. இந்நிலையில், சென்னை அணியின் முன்னாள் கேப்டனாக இருந்து வந்த எம்எஸ் தோனி (MS Dhoni), எதிர்வரும் ஐபிஎல் 2025 போட்டிக்கு தயாராகி, வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பான புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில், வலைப்பயிற்சியின் போது எம்எஸ் தோனி செல்போன் பயன்படுத்தும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. MS Dhoni: ஐபிஎல் 2025 போட்டிக்கு தயாராகும் தல தோனி; தீவிர பயிற்சி.. வைரல் க்ளிக்ஸ் லீக்.!
வீடியோ இதோ:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)