MS Dhoni IPL 2025 (Photo Credit: @kumarinewsoffic X)

ஜனவரி 21, புதுடெல்லி (Sports News): ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டிகள், 14 மார்ச் 2025 ல் தொடங்கி 25 மே 2025 ல் (IPL 2025 Schedule) நிறைவுபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரிய சம்மேளனத்தின் அனுமதியுடன் நடத்தப்படும் இந்திய பிரீமியர் லீக் (Indian Premier League) போட்டியில், 10 அணிகள் பங்கேற்று தங்களுக்குள் பலபரீட்சை நடத்தும் 74 போட்டிகளில் ஒவ்வொன்றும் கிரிக்கெட் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தும். 20 ஓவர்கள் முறையில், டி20 ஆட்டமாக நடைபெறும் ஐபிஎல் போட்டியில், உலகளாவிய முக்கிய வீரர்களும் பல்வேறு அணிகளில் இடம்பெற்று இருப்பார்கள் என்பதால், ஒவ்வொரு ஆட்டமும் கொண்டாட்டத்துடன் இருக்கும். Lucknow Super Giants: லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்; கலைகாட்டப்போகும் ஐபிஎல் 2025.! 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

இந்திய பிரீமியர் லீக்கில், ரசிகர்களால் பெரிதளவு கொண்டாடப்படும் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai IPL CSK) அணியின் நடப்பு கேப்டனாக ருத்ராஜ் கைக்கவாட் இருக்கிறார். கடந்த 2008ம் ஆண்டு முதல் 16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் களமிறங்கி விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings), கடந்த 2010, 2011, 2018, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் வெற்றிக்கோப்பையையும் தட்டிச்சென்றுள்ளது. சென்னை அணியின் முன்னாள் கேப்டனாக இருந்து வந்த தோனி, கடந்த சீசனில் எதிர்வரும் தலைமுறைக்கு தனது பொறுப்பை விட்டுக்கொடுத்து, அணியின் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருந்தார். இந்நிலையில், எதிர்வரும் ஐபிஎல் 2025 போட்டிக்கு எம்.எஸ் தோனி தயாராகி, பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பான புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அது கடந்த ஆண்டு எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. எனினும், தோனி பயிற்சி எடுக்கத் தொடங்கிய செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.