காவல்நிலையத்தில் நுழைந்த சிறுத்தை.. பீதியடைந்த காவலர்.., வெளியான சிசிடிவி காட்சி உள்ளே..!
நீலகிரியில் சிறுத்தை ஒன்று காவல்நிலையத்தில் நுழைந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 29, ஊட்டி (Nilgiris News): நீலகிரி மாவட்டம், கூடலூர் - ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நடுவட்டம் காவல்நிலையத்திற்குள் நேற்று (ஏப்ரல் 28) இரவு சிறுத்தை நுழைந்துவிட்டது. அப்போது, நுழைவு வாயில் அறைக்குள் நுழைந்த சிறுத்தை (Leopard), அறையை சுற்றிப் பார்த்தது வெளியே சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலர், சிறுத்தை வெளியே சென்றதை உறுதி செய்தவுடன், மெதுவாக வெளியே வந்து, நுழைவாயில் கதவை பூட்டினார். பிறகு, இச்சம்பவம் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கும், வனத்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது.. இதனையடுத்து, நடுவட்டம் வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் வீடியோ காவல்நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. Trending Video: கட்சி நிர்வாகிகளுக்கு மதுவுடன் தடபுடல் விருந்து? எம்.எல்.ஏ பெயரில் வைரலாகும் வீடியோ.!
சிசிடிவி வீடியோ இதோ:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)