TN Weather Update: காலை 10 மணிவரையில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

செங்கல்பட்டு, சேலம், திருவண்ணாமலை உட்பட 6 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Rains (Photo Credit: @NewsMobileIndia X)

ஆகஸ்ட் 13, சென்னை (Chennai News): தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை-காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மழை முதல் மிதமான மழை (Weather Update Tamilnadu) பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புகளும் உள்ளது என வானிலை ஆய்வு மையம் தனது நாளைய வானிலை (Tomorrow Weather) அறிவிப்பில் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், இன்று (15 ஆகஸ்ட் 2024) காலை 10 மணிவரையில் செங்கல்பட்டு, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. TN Weather Update: ஆரஞ்சு எச்சரிக்கை.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement