TN Weather Update: இரவு 8 மணிவரை வெளுத்தது வாங்கப்போகும் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

திருவள்ளூர், சென்னை, தென்காசி உட்பட 17 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Rain in Tamilnadu (Photo Credit: @THChennai X)

ஜூன் 04, சென்னை (Chennai): தமிழ்நாடு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இரவு 8 மணிவரையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரமாக கொழுத்தியெடுத்த வெயிலில் இருந்து மழை விடுதலை அளித்த நிலையில், மீண்டும் அதிகரித்த வெப்பத்தை தணிக்க மழை வாய்ப்பு எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளனர். Rahul Gandhi on Election Results 2024: இந்தியாவில் ஆட்சிமாற்றம்? காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முடிவு என்ன? ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி..! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)