ஜூன் 04, புதுடெல்லி (New Delhi): 18வது இந்தியா தேர்தல்கள் 2024 முடிவுகளின்படி, பாஜக தலைமையிலான கூட்டணி மாலை 6 மணிநிலவரப்படி 294 தொகுதிகள் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி 232 தொகுதிகளில் பின்தங்கி இருப்பதால், தொடர்ந்து 3 வது முறை பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் சூழல் உண்டானாலும், இறுதிக்கட்ட கூட்டணி பிரச்சனைகள் காங்கிரசுக்கு சாதகமான வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi Speech), சோனியா காந்தி ஆகியோர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கார்கே மற்றும் ராகுல் காந்தி தங்களின் வாதத்தை முன்வைத்தனர். PM Narendra Modi Victory: வாரணாசி தொகுதியில் 1.82 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் பிரதமர் நரேந்திர மோடி..!
மல்லிகார்ஜுன கார்கே பேச்சு:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இன்று மக்களவைத் தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இவை மக்களின் தீர்ப்பு. மக்களவை தேர்தல் மோடிக்கும் - மக்களுக்கும் இடையே நடைபெற்ற தேர்தல் ஆகும். இந்த தேர்தல் முடிவு மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வியை குறிக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும்.
தனது பெயரை மட்டுமே அவர் கூறி வாக்கு சேகரித்தார். இதுவே அவரின் தோல்விக்கான காரணம். எங்களது வாங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டன. கூட்டணிக்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு இடையூறுகளை நாங்கள் எதிர்கொண்டபோதும் இண்டியா கூட்டணி வெற்றி அடைந்தது. இந்த வெற்றிக்கு ராகுல் காந்தியின் 2 யாத்திரைகள் பெரும் உதவி செய்தது. DMK A Mani Victory: திமுக கைவசம் சென்றது தர்மபுரி தொகுதி: தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி.!
பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் நாங்கள் வெற்றி அடைந்துள்ளோம். இண்டியா கூட்டணிக்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே குரலில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். தொடர்ந்து நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், விவசாயத்திற்கும் நாங்கள் போராடுவோம்" என பேசினார்.
ராகுல் காந்தி அறிவிப்பு:
அதனைத்தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "2024 மக்களவை தேர்தல் அரசியல் ரீதியிலான தேர்தல் இல்லை. சிபிஐ, ஈடி உடன்பட அரசு இயந்திரங்களை பாஜக தவறாக பயன்படுத்தியது. அதற்கான தேர்தல் இது. அரசியல் சாசனத்தை காப்பாற்றுவதற்கான தேர்தலாக 2024 மக்களவை தேர்தல் அமைந்துள்ளது. மக்கள் தெளிவான பார்வையுடன் இருக்கின்றனர்.
அவர்களின் முன் எங்களின் நோக்கத்தை தெரிவித்தோம். அரசியல் சாசனத்தை காப்பாற்றும் வேலையை விவசாயிகள் மற்றும் ஏழை மக்கள் செய்து இருக்கின்றனர். இந்திய தேசம் மோடியை புறக்கணித்து இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி சரியாக நடைபெறுகிறது. நாட்டின் குரலாக இருக்கும் அரசியல் சாசனத்தை செல்வந்தர்கள் எதிர்காலவில்லை. ஆட்சி அமைப்பது குறித்து இண்டியா கூட்டணியுடன் நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பின் முடிவெடுக்கப்படும். DMK Kanimozhi Victory: தூத்துக்குடி தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்றார் கனிமொழி; கொண்டாட்டத்தில் திமுக.!
2024 மக்களவை தேர்தலுக்கு பின் ஆட்சி அமைப்பதில் எங்களுக்கும் - பாஜகவுக்கும் மெல்லிய கொடு மட்டுமே இருக்கிறது. எங்களின் யுக்திகளை சொல்லிவிட்டால் மோடி உஷாராக செய்யப்படுவார். கூட்டணிக்கட்சிகளுக்கு உறுதியளித்தவாறு ஆலோசனை நடத்தி நாங்கள் அதற்கேற்ப செயல்படுவோம். புதிய கட்சிகளை கூட்டணியாக இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறோம். உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மக்கள் பாஜகவின் மோசமான அரசியலை புரிந்துகொண்டுள்ளனர்" என தெரிவித்தார்.