Marandahalli Elephant Died: சட்டவிரோத மின்வேலியால் கொடூரம்.. கோடைக்கு புலம்பெயர்ந்த யானைகள் மின்சாரத்தில் சிக்கி பரிதாப பலி.!

மலையோரங்களில் பண்ணை வீடு, தோட்டம் வைத்துள்ள மிராசுதார்கள், விலங்குகளை அவர்களின் தோட்டங்களில் இருந்து விலக்கி வைக்க கொஞ்சம் கூட நல்லெண்ணம் இல்லாது வேலிகளில் மின்சாரத்தை பாய்ச்சி அதன் உயிரை குடித்து வருகின்றனர்.

Marandahalli of Dharmapuri District, Elephant Death touch Electric Fence Issue Visual (Photo Credit: ANI)

மார்ச் 07, மாரண்டஹள்ளி (Dharmapuri News): தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி (Coimbatore, Krishnagiri, Dharmapuri) மாவட்டங்களில் யானைகள் (Elephant Forests) அதிகம் உலாவும். இதனால் அங்குள்ள தோட்ட உரிமையாளர்கள் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக இரும்பு வேலிகளில் மின்சாரத்தை (Electricity) பாய்ச்சுவதும், அவ்வழியே செல்லும் வனவிலங்குகள் அடிபடுவதும் தொடர்கதையாகியுள்ளது. இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஹள்ளி ( Marandahalli, Dharmapuri district) கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியால், அதனை கடக்க முயன்ற 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தர்மபுரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Rajnath Singh Speech: இந்தியாவை எதிர்காலத்தில் தாக்க திட்டமிட்டுள்ள நாடுகள்… உச்சகட்ட எச்சரிக்கை விடுத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)