TN Weather Update: காலை 10 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
கடலூர், கரூர், புதுக்கோட்டை உட்பட 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரையில் மழைக்கு சாதகமான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 14, சென்னை (Chennai News): தமிழக பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை-காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தனது நாளைய வானிலை (Tomorrow Weather) செய்திக்குறிப்பில் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 14ம் தேதியான இன்று, வரும் 3 மணிநேரத்திற்கு, அதாவது காலை 10 மணிவரையில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. TN Weather Update: 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)