Thirumurai Thiruvizha: சென்னையில் முதல்முறை.. மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணத்தை நேரில் கண்டு ரசித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

நீலாங்கரையில் இன்று சென்னை மாநகரிலேயே முதல் முறையாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண நிகழ்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் முதல் முறையாக நேரில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

Thirumurai Thiruvizha Function | Central Minister Rajnath Singh (Photo Credit: @ANI X / Facebook)

டிசம்பர் 16, சென்னை (Chennai): அகில இந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பில் (International Mudhaliyar Pillaimar Association IMPA), சென்னையில் உள்ள நீலாங்கரை ஆர்.கே கன்வென்ஷன் சென்டரில், டிசம்பர் 16ம் தேதியான இன்று, முதல் முறையாக மீனாட்சி சுந்தரேஸ்வரனின் திருமண நிகழ்வான திருமுறை திருவிழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் திருமுறை இசை, திருக்கல்யாணம், நாதஸ்வர இசை, பட்டிமன்றம் ஆகியவையும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் (Rajnath Singh), திருவாடுதுறை ஆதீனம், தர்மபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், பேரூர் ஆதீனம் உட்பட 10 ஆதீனங்களும் கலந்துகொண்டனர். இன்று காலை 8 மணிமுதல் நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிகழ்வில், அவர்களின் வசதிக்காக திருவான்மியூரில் இருந்து நீலாங்கரை செல்ல சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு இருக்கின்றன. Nagpur Mumbai Road Accident: கார் - டிரக் மோதி பயங்கர விபத்து: அப்பளம் போல நொறுங்கிய கார்., 6 பேர் பரிதாப பலி.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement