Trending Video: சாரே! தங்கம் என்ன விலை? நகைக்கடைக்குள் ரைடு விட்ட புள்ளி மான்.. பதறிப்போன மக்கள்.!
நகைக்கடை ஒன்றில் புள்ளிமான் நுழைந்து பின் புறப்பட்டுச் சென்றது. இதன் வைரல் காட்சிகள் வெளியாகி புள்ளி மான் நகை எடுக்க வந்ததா? என கேள்வியை எழுப்பியுள்ளது.
மே 03, சோமனூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமனூர் பகுதியில் தனியார் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இரவு நேரத்தில் கடை வழக்கம்போல செயல்பட்டு வந்தது. சில வாடிக்கையாளர்கள் கடையில் இருந்தனர். இதனிடையே, கடைக்குள் திடீரென புள்ளி மான் ஒன்று புகுந்தது. பின் டைல்ஸில் எழுந்து சரிவர நடக்க முடியாமல் வழுக்கியபடி தன்னை நிலைநிறுத்திக்கொண்ட மான் பத்திரமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. நெட்டிசன்கள் பலரும் இந்த விடியோவை தங்களின் பாணியில் கலாய்த்து வருகின்றனர். மேலும், நகை விலை அதிகரித்து இருக்கும் செய்தி மான் வரை சென்றுவிட்டது போல். அதனால் தான் அதுகுறித்து விசாரிக்க புள்ளி மான் வந்துள்ளது எனவும் கலாய்கின்றனர். Coimbatore News: சிறுவனுக்கு அவசர உதவி.. 3 மணிநேரத்தில் போராடி உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.. குவியும் பாராட்டுக்கள்.!
கோவையில் மான் ஒன்று நகைக்கடைக்குள் சென்ற காணொளி:
விழுப்புரத்தில் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை அதிகாரிகளை மீட்ட காணொளி:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)