Sivagangai News: மதநல்லிணக்கத்தின் இலக்கணம் நாங்கள்.. கோவில் குடமுழுக்கு பண்டிகைக்கு சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமிய சொந்தங்கள்.!

கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். மதநல்லிணக்கம், இந்து-இஸ்லாமியர் ஒற்றுமையின் அடையாளமாக காரைக்குடியில் இவ்விசயம் நடைபெற்றது.

Karaikudi Mariyamman Temple Festival (Photo Credit: @News18Tamilnadu X)

பிப்ரவரி 04, காரைக்குடி (Sivagangai News): சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, அண்ணா நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ லலிதா முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில் குடமுழுக்கு நடைபெற்றது. அப்பகுதியில் இந்து - இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் நிலையில், இருவரும் சகோதரத்துவத்துடன், அன்பு பாராட்டி வாழ்கின்றனர். இதன் அடையாளமாக, கோவில் குடமுழுக்கு திருவிழாவுக்கு இஸ்லாமிய சகோதர-சகோதரிகள் பலரும் சீர்வரிசை எடுத்து வந்து இருந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்கள் சார்பில் மங்கள வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் குடமுழுக்கு தீர்த்த நீர் தெளிக்கப்பட்டு, அன்னதானத்தில் அவர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளை பெற்று விழாவினை சிறப்பித்து இருந்தனர். இந்த விஷயம் தொடர்பான காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. Kerala Lottery 2024-2025: கோடிகளை அள்ளப்போவது யார்? கேரளா லாட்டரி 2024 - 2025: அசத்தல் தகவல் இங்கே.! 

மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளையாகிய இஸ்லாமிய சகோதர-சகோதரிகள்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now