Kerala Lottery (Photo Credit: @Raghav64503770 X)

பிப்ரவரி 04, திருவனந்தபுரம் (Kerala News): கேரளா மாநிலத்தில், அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளுடன், கேரளா லாட்டரி இயக்குநரகத்தின் நேரடி கண்காணிப்பில் லாட்டரி விற்பனை மற்றும் பரிசுத்தொகை விநியோகம் நடக்கிறது. அம்மாநிலத்தில் லாட்டரி விற்பனை என்பது சட்டபூர்வமான ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கேரளா மக்களால் அதிகம் விரும்பப்படும் லாட்டரி பரிசுத்தொகை, பண்டிகை மற்றும் கொண்டாட்ட காலங்களை கருத்தில் கொண்டு 6 முறைகளில் பிரித்து அறிவிக்கப்படும். ஒவ்வொரு முறை பரிசுத்தொகை அறிவிக்கப்படும்போது, அதிகபட்சமாக ரூ.46 கோடி வரை பரிசாக கொடுக்கப்படும்.

கேரளா கிறிஸ்துமஸ் லாட்டரி 2024-2025 நாளை வெளியாகிறது:

கேரளா மாநிலத்தில் வாழ்ந்து வரும் மக்கள், அதிஷ்டத்தின் பேரில் விரைந்து பொருளீட்ட நினைத்து வாங்கும் விஷயத்தில் லாட்டரி முக்கிய பங்கை கொண்டுள்ளது. தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி தேர்வு செய்யப்பட்டு இருந்த பம்பர் பிஆர் 95 லாட்டரி முடிவுகள் 05 பிப்ரவரி 2025 நாளை, மதியம் 2 மணிமுதல் 5 மணிவரை வெளியிடப்படுகிறது. இந்த அறிவிப்பை எதிர்பார்த்து கேரளாவில் லாட்டரி வாங்கியவர்கள் பலரும் காத்திருக்கின்றனர். லாட்டரி தொகையை வெல்லும் நபர்களுக்கு 30% முதல் 40% வரை வரி விதிக்கப்பட்டு, எஞ்சிய தொகை பிடித்தம் செய்து வழங்கப்படும். Job Alert: பிஎஸ்சி நர்சிங் படித்தவரா நீங்களா? நல்ல சம்பளத்தில் அரேபிய அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலை.. விபரம் உள்ளே.!

பரிசு விபரங்கள்:

தற்போதைய பம்பர் லாட்டரியில் முதல் வெற்றியாளருக்கு ரூ.20 கோடி பரிசாக வழங்கப்படும். இரண்டாது வெற்றியாளர்களுக்கு ரூ.1 கோடி வீதம் தலா 20 பேருக்கு வழங்கப்படும். மூன்றாவது வெற்றியாளருக்கு ரூ.10 இலட்சம் வீதம் தலா 30 பேருக்கும், நான்காவது வெற்றியாளருக்கு ரூ.3 இலட்சம் வீதம் 20 பேருக்கும், ஐந்தாவது வெற்றியாளருக்கு ரூ.2 இலட்சம் வீதம் தலா 20 பேருக்கும் தொகை பிரித்து வழங்கப்படும். கேரளாவில் வசிக்கும் மக்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டு, இன்று வரை லாட்டரி என்பது அமலில் இருக்கிறது. அதிஷ்டம் இருப்பவர்கள் பரிசு தொகையை வென்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டது:

அதேநேரத்தில், தமிழ்நாட்டில் முன்னதாக அமலில் இருந்த லாட்டரி, இன்றைய ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் கடன் மோசடி பல பல குடும்பங்களின் அழிவுக்கு குடியை போல காரணமாக இருந்தது. இதனால் தமிழ்நாடு அரசு லாட்டரி பழக்கத்தை தமிழகத்தில் தடை செய்து உத்தரவிட்டது. எனினும், ஆங்காங்கே லாட்டரி விற்பனை நடந்து வந்தாலும், அதனை அரசு உரிய முறையில் கண்டறிந்து, சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

கேரளா லாட்டரி பரிசு விபரம்: