வானிலை: வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; இந்திய வானிலை மையம் அறிவிப்பு.!

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu Rains (Photo Credit: @NewsMobileIndia X)

செப்டம்பர் 24, புதுடெல்லி (New Delhi): மத்திய மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த சுழற்சி நிலவி வந்த நிலையில், இன்று வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. ஆந்திரா - வடக்கு ஆந்திரா, மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் மழை நிலவரம் என்பது மாறுபடலாம் என இந்திய வானிலை (Indian Meteorological Center) ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தென்மேற்கு பருவமழை விலகத்தொடங்கியுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதையொட்டி வங்கக்கடலில் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வருகிறது. வானிலை: சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை; குளுகுளு சூழலால் மக்கள் மகிழ்ச்சி.! 

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது: