MK Stalin: திருக்குறளின் முதல் அச்சுப்புத்தகத்தை பரிசாகப் பெற்ற தமிழ்நாடு முதல்வர்; மனம் நெகிழ்ந்து வலைப்பதிவு.!
தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினுக்கு, திருக்குறளின் முதல் அச்சுப்பதிப்பு பரிசாக வழங்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்ட முதல்வர், அறிஞர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களை பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 27, சென்னை (Chennai News): உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக அறிஞர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டு சமீபத்தில் உத்தரவிடப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து அறிஞர் பாலகிருஷ்ணன் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். மேலும், இதுதொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் வலைப்பக்கத்தில், "தமிழ்வழியில் படித்து, தமிழிலேயே குடிமைப் பணித் தேர்வெழுதி IAS ஆகி, தமிழாராய்ச்சியின் பரப்பைத் தமிழ்நாட்டையும் தாண்டி, ஏன் இன்றைய இந்திய நாட்டையும் தாண்டி அகலப்படுத்திய அறிஞர் பாலகிருஷ்ணன் அவர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதையொட்டி மகிழ்ச்சி நிறைந்த மனத்தோடு வாழ்த்தினேன். 1812-இல் வெளியான திருக்குறளின் முதல் அச்சுப் பதிப்பை அன்பளிப்பாகத் தந்தார்! அவர் பணி சிறந்து, தொல்தமிழர் வரலாற்றின் பல புதிய பக்கங்களை உலகுக்கு வெளிக்காட்டட்டும்!" என தெரிவித்துள்ளார். 50,000 பேருக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு.. ரூ.5,000 கோடி செலவில் புதிய தொழிற்சாலை.. தமிழக அரசு அதிரடி..!