TVK Vijay: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு., தவெக தலைவர் விஜய் வேதனை.. இரங்கல்.!

தந்தை பெரியாரின் குடும்பத்தை சேர்ந்தவரும், தமிழக அரசியலில் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவு தன்னை வேதனையில் ஆழ்த்தியதாக விஜய் தெரிவித்துள்ளார்.

TVK Vijay | EVKS Elangovan (Photo Credit @TVKVijayhq / @berlina_1850 X)

டிசம்பர் 14, சென்னை (Chennai News): காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவு தன்னை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்" என கூறப்பட்டுள்ளது. EVKS Elangovan: ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்; சோகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள்.! 

தவெக தலைவர் விஜயின் இரங்கல் குறிப்பு:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)