டிசம்பர் 14, சென்னை (Chennai News): ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் (EVKS Elangovan), கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதியான இளங்கோவனுக்கு, மருத்துவர்கள் உயரிய சிகிச்சை அளித்து வந்தனர்.
இளங்கோவன் மறைந்தார்:
இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் நுரையீரல் தொற்று, மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை 10:12 மணியளவில் காலமானார். கடந்த ஒரு மாதமாக சிறப்பு சிகிச்சை பெற்று வந்த இளங்கோவன், இன்று அவரின் உடல்நிலை சிகிச்சையை ஏற்றுக்கொள்ளாமல் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். Gold Silver Price: தங்கம் விலை இன்று கிடுகிடு குறைவு.. சவரன் ரூ.57,120 க்கு விற்பனை..!
பெரியாரின் பேரன்:
தனது 75 வயதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைந்துள்ளார். விரைவில் அவரின் உடல் காங்கிரசின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு எடுத்து செல்லப்படும். அங்கு அஞ்சலி செலுத்திய பின்னர், ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அவரின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும். தமிழகத்தில் தீண்டாமை, பெண் உரிமைக்காக போராடிய பகுத்தறிவு பகலவன் ஈவே ராமசாமி என்ற பெரியாரின் பேரன் இளங்கோவன், 1984ல் முதல் முறை சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார்.
மகனின் மறைவுக்கு பின் மீண்டும் அரசியல்:
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகவும் 2002 முதல் 2004 வரை பொறுப்பேற்று பணியாற்றியவர், மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். கடந்த 2004 முதல் 2009 வரை மத்திய இணை அமைச்சராக அவர் பொறுப்பேற்று இருந்தார். இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா மறைவைத்தொடர்ந்து, மீண்டும் ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பேற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியலில் முக்கிய தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவுக்கு, தமிழக அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.