கலியுகத்தில் இப்படி ஒரு நேர்மை... சிறுமிகளுக்கு குவியும் பாராட்டு..!

திருத்தணி முருகன் கோவிலில் கண்டெடுத்த 1.50 லட்சம் மதிப்பிலான தங்க நகையை, 2 சிறுமிகள் உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

Two girls Safely handed over Gold Jewelry (Photo Credit: YouTube)

ஏப்ரல் 08, திருத்தணி (Tiruvallur News): திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி (Tiruttani) முருகன் கோவிலில் சாமி கும்பிட, பக்தர்கள் ஏராளமாக வந்து செல்கின்றனர். இந்நிலையில், சென்னை சேர்ந்த பக்தர் ஒருவர் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது, அவரது 1.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகை தவறவிட்டார். இதனையடுத்து, கார் பார்க்கிங்கில் அந்த நகை கிடந்துள்ளது. இதனை கண்டெடுத்த சிறுமிகள் ரேணுகா, பவித்ரா ஆகியோர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்பு, நகை உரிமையாளரிடம் பத்திரமாக கொடுக்கப்பட்டது. இந்த ஏழ்மையான சூழலிலும், கண்டெடுத்த நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த சிறுமிகளை, காவல்துறையினர் உட்பட அனைவரும் பாராட்டி வருகின்றனர். Madurai Shocker: ஓய்வு பெற்ற காவல் அதிகாரி உடல் அழுகிய நிலையில் மீட்பு.. நடந்தது என்ன..?

வீடியோ இதோ:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement