Retired Police Superintendent Dies (Photo Credit: YouTube)

ஏப்ரல் 08, மதுரை (Madurai News): மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் பகுதியில் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் (Police Superintendent) துரைசிங்கம் வசித்து வந்தார். தனது மனைவி உயிரிழந்த நிலையில், இவரது மகன் சென்னையில் வசித்து வருகிறார். உடல், அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். Job Alert: சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு.. ரூ.58,100 சம்பளம்.., முழு விபரம் இதோ..!

அழுகிய நிலையில் காவல் அதிகாரி உடல்:

தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வீட்டை திறந்து பார்த்த போது, ஓய்வு பெற்ற காவல் அதிகாரியின் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனையடுத்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் முடிவில், அவர் உடல் நலக்குறைவால் வீட்டிற்குள்ளேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.