Train Derail Video Viral: சரக்கு இரயில் தடம்புரண்டு விபத்து.. தண்டவாளத்தில் தடுமாறி பயணித்த பெட்டிகள்.. வீடியோ வைரல்.!

தண்டவாளத்தில் சென்றுகொண்டு இருந்த சரக்கு இரயில் திடீரென தடம்புரண்டு விபத்திற்குள்ளான நிலையில், தண்டவாளத்தை சாலை வழியே கடக்க முயன்றவர்கள் எடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.

Oklahoma Goods Train Derailment (Photo Credit: Twitter)

மார்ச் 08, ஒக்லஹோமா (World News Tamil): அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா (Verdigris, Oklahoma) மாகாணம், வெர்டிகிரிஸ் நகரில் சரக்கு இரயில் ஒன்று பயணம் செய்துகொண்டு இருந்தது. இந்த இரயில் திடீரென தடம்புரண்டு (Derailment) விபத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் இரயில் பெட்டிகள் சாலைகளில் இழுத்து செல்லப்படுவது தொடர்பான பதைபதைப்பு வீடியோ (Video Footage) காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தால் உயிர்சேதம் இல்லை என்றாலும், வீடியோ இரயில்வே நிர்வாகத்தின் மீது பல விமர்சனத்தை முன்வைக்கும் அளவு அமைந்துள்ளதாக அங்குள்ள விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். விபத்து காரணமாக நெடுஞ்சாலை எண் 66, தெற்கு சாலை எண் 4110 மூடப்பட்டுள்ளது. Team India Celebrates Holi: ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியாக சிறப்பித்த இந்திய கிரிக்கெட் அணி.. வீடியோவை வெளியிட்ட பிசிசிஐ..

#Verdigris #Oklahoma

Train had a little oopsy-daisy and it fell apart; minor derailment. pic.twitter.com/3b1M26SWi4

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)