Bangladesh Earthquake: வங்கதேசத்தில் இன்று காலையிலேயே மிதமான நிலநடுக்கம்: பீதியில் வீதிகளில் தஞ்சம் புகுந்த மக்கள்.!

மனிதனின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அவனுக்கே எதிராக திரும்புகிறது.

Bangladesh Earthquake Alert | Earthquake File Pic (Photo Credit: @ANI X / Pixabay)

நவம்பர் 02, வங்காளதேசம் (Bangladesh): சர்வதேச அளவில் நடப்பு ஆண்டு முழுவதும் அதிபயங்கர நிலநடுக்கம் (Earthquakes) ஏற்பட்டு பெரும் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. துருக்கி, இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான், நேபாளம் நாடுகளில் நிலநடுக்கத்தால் மக்கள் கடும் சோகத்தை எதிர்கொண்டனர். துருக்கியபோல சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தியா - பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளை மையமாக கொண்டு ஏற்படும் என நிலவியல் ஆய்வாளரும் எச்சரித்து இருக்கிறார். அதனை உறுதிசெய்யும் பொருட்டு நிலநடுக்கங்களும் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று காலை 09:05 மணியளவில், வங்காளதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. சில இடங்களில் லேசாக கட்டிடங்கள் குழுங்கியதால், மக்கள் வீதிக்கு வந்தனர். மேற்படி உயிரிழப்பு தொடர்பான விபரங்கள் இல்லை. அவை சேகரிக்கப்படுகின்றன. Chennai Shocker: கல்லூரி மாணவியான காதலியை கழுத்தை நெரித்து கொன்ற காதலன்: அறை எண் 201ல் நடந்தது என்ன?.. வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ்.. பதறவைக்கும் சம்பவம்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)