2nd Massive Turkey Earthquake: துருக்கியில் மீண்டும் அதிபயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு.!

ஆயிரத்திற்கும் அதிகமானோரை காலையில் இருந்து பலிவாங்கிய துருக்கி நிலநடுக்கம், மாலையில் மீண்டும் மற்றொரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது.

2nd Massive Earthquake at Turkey

பிப்ரவரி 06, துருக்கி: இன்று அதிகாலை துருக்கி, சிரியா, லெபனான் (Turkey, Syria, Lebanon) போன்ற நாடுகளில் ரிக்டரில் 7.8 அளவில் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், துருக்கியில் கோர (Turkey Earthquake) அழிவு ஏற்பட்டுள்ளது இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதால், பலி எண்ணிக்கை 1500-ஐ கடந்துள்ளது. மக்கள் கொத்து கொத்தாக சடலமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது மீண்டும் தெற்கு துருக்கி (2nd Massive Earthquake on Turkey) பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டுள்ளது. Turkey Earthquake: நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட துருக்கிக்கு செல்கிறது இந்திய மீட்பு குழு – பிரதமர் அலுவலகம் அறிவிப்பு.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)