PM Modi Kuwait Visit: 43 ஆண்டுகளில் முதல்முறை.. குவைத் சென்றடைந்தார் பிரதமர் மோடி..!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக குவைத் சென்றடைந்தார்.
டிசம்பர் 21, குவைத் (World News): இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), இரண்டு நாள் அரசு முறை பயணமாக குவைத் (Kuwait) நாட்டின் அமீர் ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில் இன்று (டிசம்பர் 21) குவைத் சென்றடைந்தார். கடந்த 43 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் குவைத்துக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும். அங்கு பிரதமர் மோடி 26வது அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார். மேலும், ஹலா மோடி நிகழ்ச்சியில் இந்திய புலம்பெயர்ந்தோருடன் உரையாடவுள்ளார். Drone Blast: அடுக்குமாடி கட்டிடத்திற்கு அருகே திடீரென வெடித்து சிதறிய டிரோன்; ரஷியாவில் பகீர் சம்பவம்.!
பிரதமர் நரேந்திர மோடி குவைத் சென்றடைந்தார்:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)