Asian Cricket Cup 2023: ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா; எங்கெங்கு தெரியுமா?.!
இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் 50 ஓவர் போட்டிகளில் ஆசிய நாடுகள் 2023 கோப்பைக்காக விளையாடுகிறது.
ஜூலை 20, புதுடெல்லி (Cricket News): ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பாக நடத்தப்படும் ஆசிய அளவிலான கிரிக்கெட் போட்டி. ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் இந்த போட்டிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 6 நாடுகளுக்கு இடையே நடைபெறுகிறது.
இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் 50 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. மொத்தமாக 13 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Italy Rains: சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்த மரங்கள்; இத்தாலியில் கோரத்தாண்டவம் ஆடிய இயற்கை.!
கடந்த 2018 ஆம் ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பைகள் தொடரில் இந்தியா அமோக வெற்றி அடைந்தது. தற்போது ஆசிய கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்காவில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய முதல் போட்டியில் செப்டம்பர் இரண்டாம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. பின் செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி கொழும்புவில் வைத்து இரண்டு அணிகளும் சந்தித்துக் கொள்கின்றன.
இதனால் இந்திய அணியை முழுவீச்சில் தயார் செய்யும் பணியில் பிசிசிஐ நிர்வாகம் ஈடுபட்டு இருக்கிறது. இதனை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் உறுதி செய்துள்ளார்.