AUS Vs PAK 1st T20I: 7 ஓவரில் 93 ரன்.. அதிரடி காட்டிய ஆஸ்திரேலியா.., பாகிஸ்தான் படுதோல்வி..!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

AUS Vs PAK 1st T20I (Photo Credit: @CallMeSheheryar X)

நவம்பர் 14, பிரிஸ்பேன் (Sports News): பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணியானது 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனையடுத்து, ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் (AUS Vs PAK) அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது இன்று (நவம்பர் 14) பிரிஸ்பேனில் (Brisbane) உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக இப்போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி (DLS Method) 7 ஓவர்களை கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. FIFA Posts Children's Day Wishes in Tamil: உலகளவில் அடையாளம் பெற்ற தமிழ்: பீஃபா கால்பந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ் பதிவு‌.!

இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 7 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 93 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்கள் எடுத்து அவுட்டானார். மார்கஸ் ஸ்டொய்னிஸ் (Marcus Stoinis) தனது பங்கிற்கு 21 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் அப்பாஸ் அப்ரிடி (Abbas Afridi) 2 விக்கெட்டுகளையும், நசீம் ஷா, ஹாரிஸ் ராப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 94 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 7 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 64 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அப்பாஸ் அப்ரிடி 20 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் நாதன் எல்லீஸ் (Nathan Ellis), சேவியர் பார்ட்லெட் (Xavier Bartlett) தலா 3 விக்கெட்களும், ஆடம் ஜம்பா 2, ஜான்சன் 1 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை கிளென் மேக்ஸ்வெல் பெற்று சென்றார்.

மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டம்: