PV Sindhu Wedding: பி.வி. சிந்து – வெங்கட தத்தா சாய் திருமணம்.. வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, தொழிலதிபர் வெங்கட தத்தா சாயியை உதய்பூரில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்துகொண்டார்.
டிசம்பர் 25, புதுடெல்லி (Sports News): புருசலா வேங்கட சிந்து என்ற இயற்பெயரை கொண்ட பிவி சிந்து (PV Sindhu), இந்தியாவின் பிரபலமான பேட்மிட்டன் வீராங்கனை ஆவார். ஒலிம்பிக், உலக சேம்பியன்ஸ், காமன் வெல்த் கேம்ஸ், ஏசியன் கேம்ஸ் என பல விளையாட்டு பிரிவுகளில் தங்கம், வெள்ளி என பல வெற்றிகளை கண்டிருக்கிறார். 29 வயதாகும் பிவி சிந்து, உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பேட்மிட்டன் வீராங்கணையாகவும் இருக்கிறார். 20 Years of Dhonism: ராஞ்சி டூ உலகமேடை.. தோனியின் சாதனைகளை ஒரே வரிகளில் பாராட்டிய சி.எஸ்.கே நிர்வாகம்.!
பி.வி. சிந்து – வெங்கட தத்தா சாய் திருமணம்:
இதனிடையே, பிவி சிந்துவுக்கும் - தொழிலதிபர் வெங்கட தத்தா சாயியை உதய்பூரில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்துகொண்டார். வேங்கட தத்தா சாய், போஸிடெக்ஸ் டெக்னலாஜி நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். வேங்கட தத்தா போஸிடெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜிடி வெங்கடேஸ்வரா ராவின் மகன் ஆவார். வேங்கட தத்தா லிபரல் ஆர்ட்ஸ் சயின்ஸ், ஸ்டெடடிஸ் டிப்ளமோ பயின்றுள்ளார். கடந்த 2018ல் பிளேம் பல்கலை.,யில் இளங்கலை வணிக நிர்வாகத்துறையில் பிபிஏ, கணக்கியல் படிப்பையும் பயின்று, பின் பெங்களூரில் இருக்கும் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனத்தில் தரவு அறிவியல் பயின்றுள்ளார்.
இந்நிலையில், இவர்களது திருமண வரவேற்பு விழா, ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில், நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினி, மகன், மகள் ஆகியோருடன் திருமண விழாவில் கலந்துகொண்டார். இவர்களுடன், நடிகர் சிரஞ்சீவி, நாகார்ஜூனா, நடிகை மிருனாள் தாக்கூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.