டிசம்பர் 23, சென்னை (Sports News): இந்திய கிரிக்கெட் அணி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிகளின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர ஆட்டக்காரரும், உலகளவில் பிரபலமான விக்கெட் கீப்பருமானவர் மகேந்திர சிங் தோனி என்ற எம்.எஸ் தோனி (MS Dhoni). 43 வயதை கடந்தாலும், தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி, கிரிக்கெட்டில் தனக்கான இடத்தை தக்கவைத்து வருகிறார். எதிர்வரும் ஐபிஎல் 2025 (IPL 2025) தொடரில், தோனியின் வருகையை எதிர்பார்த்து அவரின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். Vinod Kambli: கிரிக்கெட்டர் வினோத் காம்ப்ளி மருத்துவமனையில் அனுமதி; உடல்நலக்குறைவால் சிகிச்சை..!
சி.எஸ்.கே நிர்வாகம் பாராட்டு:
இந்நிலையில், தோனி (MS Dhoni) சர்வதேச கிரிக்கெட்டில் இணைந்து 20 ஆண்டுகள் நிறைவுபெறுவதை போற்றும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "இரண்டு தசாப்தத்தின் கனவுகள், காலத்தால் அழியாத ஆட்சி இது. இரயில்களை துரத்தியது முதல் உலகம் போற்றும் வரை, மகியின் அரவணைப்பு, அச்சமில்லாத தொடக்கம், பாரம்பரியமாக நிலைத்து நிற்கிறது. இது காலத்தால் அழிக்க இயலாதது" என பதிவிடப்பட்டுள்ளது.
எம்.எஸ் தோனியை பாராட்டி சி.எஸ்.கே நிர்வாகம் பதிவு:
Two decades of dreams, a timeless reign,
From chasing trains to a world acclaimed.
Fearless beginnings to glory’s embrace,
Thala’s legacy stands, time cannot erase. 👑#20YearsOfThala #WhistlePodu @msdhoni pic.twitter.com/FSINiKRqsF
— Chennai Super Kings (@ChennaiIPL) December 23, 2024