IPL 2025 Schedule: அடுத்த 3 ஆண்டுக்கான ஐபிஎல் தேதிகள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே..!
ஐபிஎல் 2025-ஆம் ஆண்டுக்கான போட்டிகள் மார்ச் 14-ஆம் தேதி முதல் மே 25-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
நவம்பர் 22, டெல்லி (Sports News): ஐபிஎல் 2025 (IPL 2025) தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. 10 அணிகள் கலந்துகொள்ளும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஐபிஎல் மெகா ஏலம் வருகின்ற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா (Jeddah) நகரில் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. IND Vs AUS 1st Test: 150 ரன்களுக்கு சுருண்டது இந்தியா.. ஆஸ்திரேலியா பந்துவீச்சில் அபாரம்..!
மெகா ஏலத்தில் மொத்தமாக 1574 வீரர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து, 574 வீரர்களின் பெயர்களை ஐபிஎல் நிர்வாகம் இறுதிசெய்துள்ளது. இதில் 366 இந்தியர்களும், 208 வெளிநாட்டு வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகளின் அடுத்த 3 ஆண்டுகளுக்கான அட்டவணையை பிசிசிஐ (BCCI) தற்போது வெளியிட்டுள்ளது. மொத்தமாக 74 போட்டிகள் இந்த சீசனில் நடைபெறுகிறது. 2025-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி மே 25 வரை நடைபெறுகிறது.
மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் தேதியும் வெளியிடப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி ஐபிஎல் தொடங்கி மே 31-ஆம் தேதி வரையும், 2027-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.