IPL 2025 Mega Auction: முதல் டெஸ்ட்டை தவறவிடும் டேனியல் வெட்டோரி.. காரணம் என்ன..?
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் கலந்துகொள்வதற்காக டேனியல் வெட்டோரி, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை தவறவிடவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
நவம்பர் 19, ஜெட்டா (Sports News): ஐபிஎல் 2025 (IPL 2025) தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. 10 அணிகள் கலந்துகொள்ளும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஐபிஎல் மெகா ஏலம் வருகின்ற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா (Jeddah) நகரில் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. மெகா ஏலத்தில் மொத்தமாக 1574 வீரர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து, 574 வீரர்களின் பெயர்களை ஐபிஎல் நிர்வாகம் இறுதிசெய்துள்ளது. இதில் 366 இந்தியர்களும், 208 வெளிநாட்டு வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். AUS Vs PAK 3rd T20I: மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடி.. பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா அசத்தல்..!
இந்நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் (Border Gavaskar Trophy 2024) தொடரும் வருகிற நவம்பர் 22-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அந்தவகையில், முதல் போட்டி பெர்த்தில் (Perth) உள்ள ஆப்டஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளாராக உள்ள டேனியல் வெட்டோரி (Daniel Vettori) செயல்பட்டு வருகிறார். மேலும், இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் உள்ளார்.
இதனால் ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்வதற்காக டேனியல் வெட்டோரி, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை தவறவிடவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (Australian Cricket Board) தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிகையில், 'சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு வரும் டேனியல் வெட்டோரிக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ள புறப்படும் முன்பாக பெர்த் டெஸ்ட் போட்டிக்கு தேவையான பயிற்சியினை அவர் அளிப்பார். அதன்பின், தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவர் அணியுடன் இணைவார்' என்று தெரிவித்துள்ளது.