AUS Vs PAK 3rd T20I (Photo Credit: @sodhamohit90 X)

நவம்பர் 18, ஹோபார்ட் (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. இதனையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில், மூன்றாவது (AUS Vs PAK) மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (நவம்பர் 18) ஹோபார்ட் (Hobart) நடைபெற்றது. SL Vs NZ 2nd ODI: குஷால் மென்டிஸ் அபாரம்.. நியூசிலாந்துக்கு எதிரான 2வது போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இலங்கை அணி..!

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பாபர் அசாம் (Babar Azam) 41 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஆரோன் ஹார்டி (Aaron Hardie) 3, ஜம்பா மற்றும் ஜான்சன் தலா 2, சேவியர் பார்ட்லெட் மற்றும் எல்லீஸ் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.

பின்னர், 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணி, அதிரடியாக விளையாடி 11.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 3-0 என கைப்பற்றியது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் (Marcus Stoinis) 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஆட்டநாயகன் விருதையும் பெற்று சென்றார்.