IND Vs AUS 1st Test: நான்காம் நாள் மதிய உணவு இடைவேளை; 104 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி வெற்றிக்கு இன்னும் 430 ரன்கள் தேவைப்படுகிறது.
நவம்பர் 25, பெர்த் (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 16-வது பார்டர் கவாஸ்கர் கோப்பை (Border Gavaskar Trophy 2024) தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு (AUS Vs IND 1st Test, Day 4) சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், கடந்த நவம்பர் 22-ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் தொடங்கியது. இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. IND Vs AUS 1st Test: யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் அபாரம்.. 2ஆம் நாள் முடிவில் இந்தியா 218 ரன்கள் முன்னிலை..!
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 49.4 ஓவர்களில் 150 ரன்களுக்கு சுருண்டது. இதனையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 51.2 ஓவர்களில் 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்நிலையில், இந்திய அணி 46 ரன்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்தியா 134.3 ஓவர்கள் விளையாடி 487 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) 161 ரன்கள், விராட் கோலி (Virat Kohli) 100* ரன்கள், கேஎல் ராகுல் (KL Rahul) 77 ரன்கள் அடித்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலியா 534 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நேற்று (நவம்பர் 24) மாலை களமிறங்கியது. மூன்றாம் நாள் (3rd Day) ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 4.2 ஓவர்களில் 12 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
இந்நிலையில், இன்று காலை 4-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி 30 ஓவர்கள் விளையாடி 5 விக்கெட்களை இழந்து 104 ரன்கள் அடித்துள்ளது. ட்ராவிஸ் ஹெட் (Travis Head) 63 ரன்னிலும், மிட்செல் மார்ஸ் 5 ரன்னிலும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற இன்னும் 430 ரன்கள் தேவைப்படுகிறது.
இந்தியா அபார பந்துவீச்சு: