MS Dhoni The Untold Story Re-Release: நாளை திரையரங்கில் மீண்டும் வெளியாகும் தோனியின் திரைப்படம்; ரசிகப்பெருமக்களே கொண்டாட தயாரா?..!
தோனி - சாக்ஷி தம்பதியின் திருமண நாள் மற்றும் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜூலை 05ம் தேதியான நாளை தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட எம்.எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஜூலை 04, சென்னை (Cinema News): கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று, உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்த இந்திய அணியின் சரித்திர நாயகன், மிஸ்டர் கேப்டன் கூல், தல (Thala Dhoni) என ரசிகர்களால் வருணிக்கப்படும் மகேந்திர சிங் (Mahendra Singh Dhoni) தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவானது எம்.எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி (M.S. Dhoni: The Untold Story). கடந்த 2016ம் ஆண்டு நீரஜ் பாண்டே இயக்கத்தில், நடிகர்கள் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், நலமுடன் திஷா பதானி, கியாரா அத்வானி, அனுபம் கர், பூமிகா சாவ்லா, கபில்தேவ் உட்பட பலர் நடித்து இப்படம் வெளியானது. சுதீர் பால்ஸானே ஒளிப்பதிவில், ஸ்ரீ நாராயணன் சிங் எடிட்டிங்கில், சஞ்சய் சௌதரி இசையில், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் படம் உருவாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படம் வெளியானது. July 5th Tamil Movie Releases: ஜூலை 5ம் தேதி வெளியாகும் தமிழ் படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ..!
மறுவெளியீடு செய்யப்படும் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்:
2016ம் ஆண்டு வெளியான ஹிந்தி படங்களில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை அடைந்த திரைப்படம் 60 நாடுகளை கடந்து உலகளவில் பல மொழிகளில் வெளியானது. பல கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பாராத படமாக தோனியின் படம் அமைந்ததை தொடர்ந்து, அன்று ரூ.215 கோடி என்ற அளவில் மிகப்பெரிய வசூல் சாதனையையும் செய்து இருந்தது. தோனி ரசிகர்கள் மட்டுமல்லாது, கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்து இருந்தது. ஹிந்தி பதிப்பை போல, தமிழ் பதிப்பும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஜூலை 05ம் தேதியான நாளை இத்திரைப்படம் மீண்டும் மறுவெளியீடு செய்யப்படுகிறது. ஜூலை 04ம் தேதியான இன்று தோனி - சாக்ஷி தோனியின் திருமண நாள் ஆகும். அதேபோல, ஜூலை 07ம் தேதி தோனிக்கு பிறந்தநாள் சிறப்பிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜூலை 05ம் தேதியான நாளை எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி மறுவெளியீடு செய்யப்படுகிறது. இதனால் தோனியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த திரையரங்க கொண்டாட்டத்தின் வீடியோ:
எம்எஸ்டி படத்தின் ட்ரைலர்:
எம்.எஸ்.டி வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய காட்சி: