IND Vs AUS 4th Test: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி; ஆஸ்திரேலியா 311 ரன்கள் குவிப்பு.. 4 வீரர்கள் அரைசதம் விளாசல்..!

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்களை இழந்து 311 ரன்கள் அடித்துள்ளது.

AUS Vs IND 4th Test Day 1 (Photo Credit: @Dubeyjilive X)

டிசம்பர் 26, மெல்போர்ன் (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியா - இந்தியா (AUS Vs IND 4th Test, Day 1) அணிகள் மோதும் 4வது டெஸ்ட் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (Melbourne) இன்று (டிசம்பர் 26) முதல் பாக்சிங் டே போட்டியாக அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. PV Sindhu Wedding: பி.வி. சிந்து – வெங்கட தத்தா சாய் திருமணம்.. வைரலாகும் புகைப்படங்கள்.!

ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு:

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களான சாம் கோன்ஸ்டாஸ் (Sam Konstas) மற்றும் உஸ்மான் கவாஜா இருவரும் அபாரமாக விளையாடி அரைசதம் விளாசினர். சாம் கோன்ஸ்டாஸ் 60 ரன்னிலும், கவாஜா (Usman Khawaja) 57 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் (Marnus Labuschagne) 72 ரன்கள் அடித்து அவுட்டானார். மறுபுறம் ஹெட் 0, மிட்செல் மார்ஸ் 4, கேரி 31 ரன்னில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

முதல் நாள் ஆட்டம் முடிவு:

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 86 ஓவர்கள் விளையாடி 6 விக்கெட்களை இழந்து 311 ரன்கள் குவித்தது. இதன்மூலம் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித் (Steven Smith) 68 ரன்கள், பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் பும்ரா 3, ஆகாஷ் தீப், ஜடேஜா, சுந்தர் தலா 1 விக்கெட்களை வீழ்த்தி உள்ளனர்.

Tags

Today News Live News Tamil Today News in Tamil News Today News Live News இன்றைய செய்திகள் Sports News Cricket Gabba Melbourne Sports Live Score Cricket Live Cricket AUS Vs IND AUS Vs IND 4th Test AUS Vs IND 4th Test Day 1 IND Vs AUS India Vs Australia India Vs Australia Live Australia Vs India Border Gavaskar Trophy 2024 BGT 2024 Perth Test Pat Cummins Mitchell Starc Sam Konstas Mitchell Marsh Marnus Labuschagne Travis Head Usman Khawaja Steven Smith Jasprit Bumrah Mohammed Siraj Nitish Kumar Reddy Rishabh Pant Virat Kohli Rohit Sharma Shubman Gill KL Rahul Yashasvi Jaiswal Ravindra Jadeja Akash Deep Washington Sundar Boxing Day Test விளையாட்டு செய்திகள் கிரிக்கெட் மெல்போர்ன் இந்தியா ஆஸ்திரேலியா பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் 2024 பாட் கம்மின்ஸ் மிட்செல் ஸ்டார்க் மிட்செல் மார்ஷ் ட்ராவிஸ் ஹெட் ஸ்டீவன் ஸ்மித் ஜஸ்பிரித் பும்ரா முகமது சிராஜ் நிதிஷ் குமார் ரெட்டி ரிஷப் பண்ட் விராட் கோலி ரோஹித் சர்மா சுப்மன் கில் கேஎல் ராகுல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரவீந்திர ஜடேஜா ஆகாஷ் தீப்