Ravichandran Ashwin: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு; ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவிப்பு.!
சுழற்பந்து வீச்சாளர், மட்டைப்பந்து ஆட்டக்காரர் என பல பெருமைகளை கொண்ட ரவிச்சந்திரன் அஸ்வின், தனது ஓய்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
டிசம்பர் 18, தி காபா (Cricket News): இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர், ஆல்ரவுண்டர் என பல பெருமைகளை கொண்டவர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin). தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அஸ்வின், இந்திய அணியில் மிகப்பெரிய வீரராக இதுவரை விளங்கி இருக்கிறார். இந்திய அணியின் பல்வேறு வெற்றிகளுக்காக, தனது அளப்பரிய பங்குகளையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய அணிக்கு உறுதுணையாக இருந்தவர்:
தற்போது வரை சர்வதேச அளவில் 105 டெஸ்ட் போட்டிகள், 116 ஒருநாள் போட்டிகள், 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், தற்போது வரையில் 1552 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 9586 ரன்களை இந்திய அணிக்காக வெவ்வேறு போட்டிகளில் பெற்றுக்கொடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பல்வேறு வெற்றிக்காக அஸ்வின் உறுதுணையாக இருந்துள்ளார். IND Vs AUS 3rd Test: கேஎல் ராகுல், ஜடேஜா அபாரம்.. பாலோ ஆனை தவிர்த்தது இந்தியா.., பேட்டிங்கில் கலக்கிய பவுலர்கள்..!
பல விருதுகளை பெற்றவர்:
கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிக்காக பல கட்டங்களில் தனது பங்களிப்பை வெளிப்படுத்திய அஸ்வினுக்கு, மத்திய அரசு அர்ஜுனா விருதும் வழங்கி கௌரவித்து இருந்தது. தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா இடையே, ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வரும் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கெடுத்துள்ளார்.
ஓய்வு அறிவிப்பு:
இந்நிலையில், அவர் சர்வதேச அளவிலான அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை பெற்றுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் அதிகமும் தொடர் சாதனை நாயகன் என பல விருதுகளை பெற்றவர், ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.