Murali Vijay Retirement: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த முரளி விஜய்.. காரணம் என்ன?.. வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.!

தனக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பளித்த பிசிசிஐ, சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட பலருக்கும் நன்றி தெரிவித்து, கிரிக்கெட்டர் முரளி விஜய் தனது ஓய்வை அறிவித்துக்கொண்டார்.

Murali Vijay (Photo Credit: PTI)

ஜனவரி 30: இந்திய கிரிக்கெட் அணியில் (Indian Cricketer) தலைசிறந்த வீரராகவும், முன்னாள் ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும் (Opening Batsman) இருந்தவர் முரளி விஜய் (Murali Vijay). இவர் தமிழகத்தில் பிறந்து இந்திய கிரிக்கெட்டில் தனக்கென தனி இடத்தை பதித்தவர் ஆவார். கடந்த 2008ல் தொடங்கிய இவரின் கிரிக்கெட் வாழ்க்கை இன்றுடன் இந்திய அளவிலான பல போட்டிகளில் நிறைவு பெறுவதாக தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கிரிக்கெட்டராக பயணத்தை தொடரும் போது இந்திய அளவில் நடைபெறும் ஐ.பி.எல் (Indian Premier League IPL) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings), டெல்லி டேர்டவில்ஸ் (Capitals), கிங் லெவன் பஞ்சாப் (Kings XI Punjab / Punjab Kings) ஆகிய அணிகளுக்காக 125 க்கும் அதிகமான போட்டியில் விளையாடியுள்ளார். அதேபோல், 61 டெஸ்ட் (Test Matches) மேட்சுகள், 17 ஒருநாள் கிரிக்கெட் (One Day Innings) தொடர், 135 எப்.சி., தொடர்களில் விளையாடி இருக்கிறார். தனது கிரிக்கெட் பயணத்தில் 22 வயதுக்கு கீழ் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பலராலும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவராக இருந்தார்.

கடந்த 2018ம் ஆண்டுக்கு பின்னர் பெரிய அளவிலான சாதனைகள், வெற்றிகள் இல்லாமல் இருந்த முரளி விஜய், தற்போது கிரிக்கெட் பயணத்தில் (Murali Vijay Retirement) இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று நான் எனது சர்வதேச அரங்கில் இருக்கும் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கிறேன். கடந்த 2008ல் இருந்து 2018 வரை எனது கிரிக்கெட் வாழ்க்கை பயணம் என்பது மறக்க முடியாதது. Annie Wersching Died Cancer: 45 வயதில் கேன்சரால் பிரபல அமெரிக்க நடிகை மரணம்.. சாகும் தருவாயிலும் நடிப்பில் விடாத நாட்டம்.!

எனக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பளித்த பிசிசிஐ (BCCI), ஐ.பி.எஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (IPL Chennai Super Kings), தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் (Tamilnadu Cricket Association TNCA) உட்பட அனைவர்க்கும் நன்றி. என்னுடன் விளையாடியவர்கள், எனக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் என உங்களுக்கும் நன்றிகள். எனது கிரிக்கெட் பயணத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், அதனை மனதார ஏற்று என்னுடன் துணை நின்ற ரசிகர்களுக்கும் நன்றி. எனது குடும்பத்தினர், நண்பர்களுக்கும் நான் மனதார நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

ஏனெனில் அவர்கள் இல்லை என்றால், நான் இன்று இங்கு இல்லை. அவர்கள் தான் ஒரு மனிதனின் முதுகெலும்பு போல என்னை பார்த்துக்கொண்டவர்கள். நான் காலத்தின் கட்டாயம் காரணமாக புதிய வாய்ப்புகளையும், தொழில்களையும் கவனிக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. ஒரு கிரிக்கெட் வீரராக எனது வாழ்க்கையில் புதிய பயணத்தை தொடங்க வேண்டியுள்ளதால், நான் ஓய்வை அறிவிக்கிறேன். அனைவர்க்கும் நன்றி. உங்கள் அனைவரையும் வாழ்க்கையில் நேசிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 30, 2023 04:11 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).