Thala Dhoni Practice: "விசில் போடு மாமே" - ஐபிஎல் போட்டிக்காக தீவிரமாக தயாராகும் தல தோனி; அசத்தல் வீடியோ உள்ளே.!
2024 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் அதே வேளையில், விளையாட்டு வீரர்கள் தங்களை முழுவீச்சில் தயார்படுத்தி வருகின்றனர்.
மார்ச் 10, சென்னை (Sports News): இந்திய ரசிகர்களால் பெருவாரியாக விடப்படும் ஐபிஎல் 2024 (IPL 2024) போட்டிகள், மார்ச் 22ம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. தற்போது 2024 மக்களவை தேர்தலும் நடைபெறவுள்ளதால், முதலில் நடைபெறும் 22 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே ஐபிஎல் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை தேர்தல் தேதி வந்ததும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயிற்சியை தொடங்கியுள்ள வீரர்கள்: 10 அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டத்தின் முதல் ஆட்டம், சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து கோலாகலமான பண்டிகையுடன் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் (CSK Vs RCB) அணிகள் மோதுகின்றன. இதனால் சென்னை மற்றும் பெங்களூர் அணியை சேர்ந்த வீரர்கள், தொடர்ந்து சென்னை வந்து பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கினர். Children Mobile Use: பச்சிளம் குழந்தை அழுகிறது என செல்போன் கொடுக்குறீங்களா?.. அதிர்ச்சி தகவல் உள்ளே.. பெற்றோர்களே மறந்தும் பண்ணாதீங்க.!
சிகை அலங்காரத்தை மாற்றிய தோனி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும், லியோ பட பாணியில் சிஎஸ்கே நிர்வாகம் வீடியோவும் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து இருந்தது. நடப்பு 2024 ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி, கடந்த ஆண்டை போல சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முதற்கட்ட செயலாக, ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்பொருட்டு தோனி தனது பழைய பாணியில் சிகை (Dhoni Hair Style) அலங்காரத்தில் தோன்றி இருந்தார்.
சிஎஸ்கே அணி வீரர்கள்: தோனி தலைமையிலான (CSK Team Squad) அணியில் எம்எஸ் தோனி, டெவோன் கான்வே, அவனிஷ் ராவ் ஆரவெல்லி, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், அஜய் மண்டல், நிஷாந்த் சிந்து, ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷர்துல் தாக்கூர், ருதுராஜ் கெய்க்வாட், ஷேக் ரஷீத், அஜிங்க்யா ரஹானே, சமீர் ரிஸ்வி ஆகியோர் விளையாடவுள்ளனர்.
இந்நிலையில், தோனி மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொள்ளும் வீடியோ சிஎஸ்கே நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.