Child Watching Mobile (Photo Credit: Pixabay)

மார்ச் 10, புதுடெல்லி (NewDelhi): தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனித சக்தியை முன்னேற்றப்பாதையில் அழைத்து சென்றாலும், அதன் அறிமுகம் பல்வேறு விதமான மனித வாழ்நாள் சுழற்சியில் தாக்கத்தினை உண்டாக்கி இருக்கிறது. குறிப்பாக இளம் தலைமுறையிடையே ஸ்மார்ட்போன் (Smartphone) பயன்பாடு என்பது கடுமையாக அதிகரித்து இருக்கிறது. பல் முளைத்த குழந்தை முதல் பல் விழும் நிலையில் உள்ள பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகி வருகின்றனர்.

உடல் ஆரோக்கியத்தை மோசமாக்கும்: குறிப்பாக 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பயன்பாடு, அவர்களின் கண்கள் பாதிப்பு தொடர்பான விஷயத்தை கணிசமாக அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து பயன்படுத்தி அதற்கு அடிமையாகுவது உடலின் ஆரோக்கியத்தை மோசமாக்கும், அவர்களின் செயல்பாடுகளில் மாற்றத்தை உண்டாக்கும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. Sophia Leone Passes Away: பிரபல ஆபாச பட இளம் நடிகை, 26 வயதில் மரணம்: சோகத்தில் ரசிகர்கள் & குடும்பத்தினர்.! 

Child Mobile Use (Photo Credit: Pixabay)

பெற்றோர்களே கவனம்: இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு (World Health Organization) மேற்கொண்ட ஆய்வின்படி, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் குறிப்பாக ஒன்று மற்றும் 2 வயது குழந்தைகள் செல்போன் திரைகளை பார்ப்பது நல்லதில்லை. 2 வயதுக்கு மேல் இருக்கும் குழந்தைகள் ஒருமணிநேரத்திற்கு மேல் செல்போன் பார்த்தால் கண்கள் சார்ந்த பிரச்சனை ஏற்படும். ஒன்றரை வயதுள்ள குழந்தைக்கு கூட பெற்றோர்கள் தங்களின் ஸ்மார்ட்போனை உபயோகம் செய்ய வழங்குகிறார்கள்.

பிற உடல்நல பாதிப்புகள்: இதனால் கட்டாயம் அக்குழந்தை செல்போனால் ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆய்வுகளின்படி, ஸ்மார்ட்போன் பயன்பாடு கண்களில் எதிர்மறையான விழாவை உண்டாக்கும். பார்வை குறைபாடு, கண்களில் வறட்சி, கண்கள் சிவத்தல், அரிப்பு, தலைவலி போன்றவையும் உண்டாகும். உறக்கம் சார்ந்த சுழற்சி முறையும் மீறுபடும். பிற்காலத்தில் கவலை, மனசோர்வு போன்றவற்றுக்கும் வழிவகை செய்யும் என்பதால், பெற்றோர்கள் குழந்தைகளிடம் செல்போனை காண்பித்து அவர்களின் அழுகையை நிறுத்த முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. Bike Entered into Bakery: அதிவேகத்தில் பயணம்.. பேக்கரிக்குள் பாய்ந்த டூவீலர்.. அதிர்ச்சி வீடியோ காட்சிகள் உள்ளே.! 

பெற்றோர்கள் தங்களின் குழந்தையுடன் நேரத்தை செலவிட முன்னுரிமை வழங்குதல், ஆரோக்கியமான உணவுகளை வழங்குதல் போன்றவை வாயிலாக குழந்தைகளுக்கு செல்போனை காண்பிக்காமல் இருப்பது, அவர்களின் கோரிக்கையை திசைதிருப்புவது நல்லது.